All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

“அம்மாவின் பாத தடங்களை வேதமென பின்பற்றுவோம்” – சசிகலா..!

sasikala-2

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பெற்ற பிறகு வி.கே.சசிகலா பேசினார்.

அவர் கூறியதாவது, “எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்த நம் இதய தெய்வம் அம்மா அவர்களை வணங்குகிறேன்.

அம்மாவின் வழியில் கழகப்பணியாற்றிட என்னை பணித்தமைக்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றி.

ஆயிரமாயிரம் கூட்டங்களுக்கு நான் ஜெயலலிதாவோடு சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனையோ கூட்டங்களில் அம்மாவுடன் கலந்துகொண்டேன். ஆனால் நான் இன்று மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது. உங்களின் அன்பு கட்டளையை ஏற்க வேண்டிய கடமையும், கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

நான் கனவிலும் கூட நினைக்காத ஒன்று, கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது. நன்கு உடல்நலம் தேறி வந்த அம்மா, நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், இன்று தனது மரணத்தின் மூலம், நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.

நம் அம்மாவுக்கு இந்த இயக்கம் தான் வாழ்க்கை. எனக்கு அம்மா தான் வாழ்க்கை. ஆனால் இறைவன் தன் அன்பு மகளை தன்னிடம் அழைத்துக்கொண்டு விட்டார்.

இனி அம்மாவின் பாத தடங்களை வேதமென பின்பற்றுவோம். அவர் காட்டிய வழியில் தான் நம் பயணம், புனிதமான பொதுவாழ்வை மேற்கொள்வோம்” என்றார்.

Leave a Comment