All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

உச்சக்கட்டத்தை எட்டிய உத்திரப்பிரதேச மோதல்..!!

yadav_0

சமாஜ்வாதி கட்சியிலிருந்து அகிலேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரபிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சிவபால் சிங் யாதவைத் தேர்ந்தெடுக்க முலாயம் சிங் யாதவ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிற்கும் அவரது மகனும் உத்தரபிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவிற்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கூறி, அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி முலாயம் சிங் யாதவ் நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து முதலமைச்சர் பதவியும் அகிலேஷிடமிருந்து பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் முலாயம் சிங் யாதவ் தீவிரமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முடிவெடுக்க கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இக்கூட்டத்திற்கு முலாயம் சிங் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில், அகிலேஷூடன் கடும் மோதல் போக்கைக் கொண்டுள்ள சிவபால் சிங் யாதவ், முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால், அதற்கு முன்பாக, கட்சி எம்.எல்.ஏ-க்களின் கூட்டத்தை அகிலேஷ் கூட்டுகிறார். அகிலேசுக்கு 175 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அகிலேஷ் யாதவுடன் தொலைபேசியில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவருக்கு தனது ஆரவை தெரிவித்துள்ளார். உறுதியுடன் செயல்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment