All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SRI LANKA

என்ன ஆட்சிதான் நடக்கிறது இலங்கையில்..??

untitled

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிந்தித்து செயற்படாத சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் விளக்கமளிப்பது கூட்டு எதிர்க்கட்சியின் பொறுப்பாக மாறியுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கருத்து வெளியிட்ட அவர், விசேட அமைச்சர் தொடர்பிலான சட்டமூலத்தின் பாரதூரம் தொடர்பில் அறிந்திராத சுதந்திரக் கட்சி அதற்கு முதலில் ஆதரவினை தெரிவித்ததாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று உலகில் எங்கும் நடைபெறாத ஆட்சிதான் இலங்கையில் நடைபெறுகிறது. முறைமைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கையையும் இந்த அரசு முன்னெடுப்பதில்லை. குறிப்பாக விசேட அமைச்சர் தொடர்பிலான சட்டமூலம். இந்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இந்தச் சட்டமூலத்தால் நாட்டுக்கு ஏற்படும் பாரதூரமான விடயங்கள் தொடர்பில் நாங்கள் தெளிவுபடுத்தினோம். அதேபோல், தேசிய அரசில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களின் அதிகாரங்களும் இதில் பூச்சியத்திற்கு வீழ்ச்சியடையும் என்றும் தெளிவுபடுத்தினோம். அதற்குப் பின்னர்தான் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கூட இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோமென வலியுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment