All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

எலி தின்னும் போராட்டம்…!!

eli

திருச்சியில், வாராந்திர குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், எலிகளை தின்னும் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று விவசாயிகளுக்கான வராந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், திடீரென தங்கள் மேலாடைகளை கழற்றி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோது, தாங்கள் கொண்டுவந்திருந்த இறந்த எலிகளை, விவசாயிகள் தின்ன முயன்றனர்.

இதனால் திடீரென அந்த பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் படுத்து போராட்டம் நடத்திய விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.

Leave a Comment