All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

ஒரே நாளில் 10 விவசாயிகள் பலி..!!

farmer-1

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் மனமுடைந்த 2 விவசாயி உயிரிழந்தனர். நடுசேத்தியை சேர்ந்த கோகுலவாசன், மேல்சேத்தி கணபதி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்தனர். நாகை மாவட்டம் கடம்பர வாழ்க்கை கிராமத்தில் பெண் விவசாயி சரோஜா உயிரிழந்தார். கோவில்பட்டியில் ஒரு விவசாயி உயிரிழந்தார். கமுதி பெரிய கையகம் கிராமத்தில் காளிமுத்து உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கருப்பையா என்ற விவசாயி உயிரிழந்தார். மயிலாடுதுறை அருகே கருவாழக்கரையில் விவசாயி ராஜ்குமார் உயிரிழந்துள்ளார்.நாகை  மாவட்டம் ஓர்குடியில் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியபெருமாள் உயிரிழந்தார். கருகிய பயிர்களை கண்ட விவசாயி கலியபெருமாள் அதிர்ச்சியில் வயலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுவரை இன்று மட்டும் தமிழகத்தில் 10 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment