All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SPORTS

கால்பந்திலுமா பில்லி-சூனியம்…??

football-1

ருவாண்டா நாட்டில் அஜம் ருவாண்டா பிரீமியர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முக்குரா விக்டோரியா அணியும், ரயோன்
ஸ்போர்ட்ஸ் அணியும் விளையாடின.

ஆட்டத்தின் முதல் பாதியில் முக்குரா விக்டோரியா அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. பல முயற்சிகள் செய்தும் ரயோன் ஸ்போர்ட்ஸ் அணியால் பதிலுக்கு கோல் போட முடியவில்லை.

பிறகு, இரண்டாவது பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ரயோன் அணி வீரர் மவ்சா கமரா, எதிரணி கோல் கம்பம் அருகே சிறிய பொருளை சொருகி வைத்து சென்றுவிட்டார். அப்போது, விக்டோரியா அணி வீரர் அவரை பிடிக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை.
இந்நிலையில், அடுத்த சில நிமிடங்களில் வீரர் மவ்சா கமரா, ரயோன் அணி சார்பாக அசத்தலான ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.

தோல்வி அடைவது போல இருந்த ரயோன் அணி கடைசி நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றியதன் மூலம் தோல்வியில் இருந்து தப்பியது. ஆனால், சூனியம் வைத்த தால்தான் கோல் அடிக்க முடிந்தது என்று விக்டோரியா அணி புகார் செய்துள்ளது. இதனையடுத்து, ரயோன் அணிக்கும், மவ்சா கமராவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் இரண்டு அணிகள் விளையாடும்போது, எதிர் அணி வீரர்களின் கவனத்தை திசை திருப்புவதோடு கண் இமைக்கும் நேரத்தில் கோல் அடிக்க முயற்சிப்பது வீரர்களின் திறமையாகும். அறிவியல் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது விளையாட்டிலும் பில்லி-சூனியம் என்று சொல்வது மூட நம்பிக்கை மட்டு மல்ல திசை திருப்பும் செயலுமாகும்.

Leave a Comment