All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SRI LANKA

கையும் களவுமாக சிக்கிய போலி பொது சுகாதாரபரிசோதகர்..!!

untitled

வர்த்தக நிலையங்களில் பண வசூலில் ஈடுபட்டு வந்த போலி சுகாதாரபரிசோதகர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டனில் பொது சுகாதார பரிசோதகர் எனக்கூறி பணம் பறிக்க முற்பட்டபோதே உணவக உரிமையாளரின் அறிவித்தலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு சென்று அவற்றை பரிசோதனை செய்து, குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான இந்த சந்தேகநபர், பல பிரதான நகரங்களுக்கு சென்று இவ்வாறான முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Leave a Comment