All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

சுரங்கத்தின் மேல்பரப்பு மூடியது..!! பலி அதிகரிக்க கூடும்..!

coal_mine

ஜார்கண்ட் மாநிலம் கோட்டாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சுரங்கத்திற்குள் 40 தொழிலாளர்கள்   சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் லால்மேடியா என்னுமிடத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் நேற்றிரவு இடிந்து விழுந்தது.

அப்போது சுரங்கத்தின் உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த 50 தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜார்கண்ட்: நிலக்கரி சுரங்கத்தில் விபத்து

நிலக்கரி வெட்டியெடுக்கும் 3 இயந்திரங்களும், நிலக்கரி ஏற்றிச் செல்லும் 7 லாரிகளும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர்.

சுரங்கத்தில் இருந்து முதற்கட்டமாக 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும் காயமடைந்தோருக்கு 25ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுவர்தாஸ் அறிவித்துள்ளார்.

Leave a Comment