All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CINEMA

செல்வி தமன்னா என்ன மன்னிச்சிருங்க..!! இயக்குனரின் கெஞ்சல்..!!

suraj

“நடிகைகள், கவர்ச்சியாக உடை அணிந்தால்தான், பணம் கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதனால், எனது படங்களில் நடிகைகளின் ஆடை கவர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வேன்” என்று தமிழ் திரைப்பட இயக்குநர் சுராஜ் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகைகள் தமன்னா, நயன்தாரா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, சுராஜ் மன்னிப்புக் கோரியுள்ளார்.

நடிகை தமன்னா உள்ளிட்ட அனைத்து திரையுலக நடிகைகளும் தன்னை மன்னிக்க வேண்டும் என தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் சுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரியுள்ளார்.

நடிகைகளை ஆடை அணிய வைப்பது குறித்து தான் கூறிய கருத்துக்கு, எதிப்புகள் வலுத்து வரும் சூழலில் இயக்குநர் சுராஜ் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
யாரைப் பற்றியும் தவறாகப் பேசி, அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தமக்கு கிடையாது என அதில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் சுராஜ், தன்னுடைய வார்த்தைகளை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment