All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SPORTS

டெஸ்ட் அணியில் விராட் கோலி இடம்பெறாததால் சர்ச்சை..!!

virat-kholi_0

ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி இடம் பெறாததால் எழுந்த சர்ச்சையால் அணியில் மாற்றம் செய்யப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 22ஆம் தேதி, சிறந்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. ஆண்டின் சிறந்த வீரராகவும், டெஸ்டின் சிறந்த வீரராகவும் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல இந்த ஆண்டின் டெஸ்ட் அணியும், ஒருநாள் போட்டி அணியும் அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டி ஐ.சி.சி. கனவு அணியில் கேப்டனாக வீராட்கோலி தேர்வாகி இருந்தார். ஆனால் டெஸ்ட் அணியில் அவர் இடம் பெறவில்லை.

இந்த அணியில் ஒரே ஒரு இந்தியரான அஸ்வின் மட்டுமே இடம் பெற்றிருந்தார். டெஸ்ட் அணியில் வீராட்கோலி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய கோலி 3 இரட்டை சதம் அடித்து இருந்தார். மேலும், கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்விகளை சந்திக்கவில்லை.

ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் அவர் இடம் பெறாதது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கிரிக்கெட் வல்லுனர்களும் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். இதன்காரணமாக ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் மாற்றம் செய்யப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அக்டோபர் மாதம் வரையே வீரர்களின் திறமை கண்டறியப்பட்டு, ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment