All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

தோண்டி எடுத்து சோதித்தால் தான் உண்மை வெளியில் வருமா..?

screenshot_113

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு  திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  பல நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் இறந்ததாக அறிவிக் கப்பட்டது. இந்நிலையில்  ஜெயலலிதாவின் இரு கால்களையும் அகற்றி விட்டதாக ஒரு தகவல்கள் பரவி வருகின்றனர். மேலும்  ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியுள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாவில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

அதுபோல, மிகப் பெரிய தலைவரான ஜெயலலிதாவின் சாவிலும் மர்மம் உள்ளது. இதுகுறித்து, விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை, மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலை பாதுகாக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்.  அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவர ஆவணங்களை இந்த ஐகோர்ட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இருந்து பெற்று, பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

அனைத்து விவரங்களும் மத்திய அரசுக்கு தெரியும். ஆனால், அதுகுறித்து வாய் திறப்பது இல்லை. மக்களுக்கு எந்த விவரங்களையும் தெரியப்படுத்தவில்லை. ஆனால், இப்போது மத்திய அரசுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்கிறீர்கள். எல்லாம் தெரியும் என்றால், அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

ஏன் மவுனமாக மத்திய அரசு இருந்தது?  விவரங்கள் எதையும் வெளியில் மத்திய அரசு சொல்லவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது மத்திய அரசுக்கு மட்டும் தான் தெரியும். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது எந்த தகவலும் சொல்லவில்லை. இப்போது இறந்த பின்னரும் எந்த உண்மையையும் வெளியில் சொல்ல வில்லை. அப்படி என்றால், பிணத்தை தோண்டி எடுத்து சோதித்தால் தான் உண்மை வெளியில் வருமா? ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் பல சந்தேகங்கள் இருக்கிறது என உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்

 

Leave a Comment