All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SRI LANKA

பரிசு பொருட்கள் அறவே கூடாது..! அதிரடி உத்தரவு..!

_93158104_150708151417_small_gift_624x351_thinkstock

பண்டிகை காலத்தில் அரசு அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது சம்பந்தமான அறி்விப்பு ஒன்றை, அந்த அணைக்குழு, பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.

பண்டிகை காலங்களில் வியாபார நிறுவனங்கள் அரச அதிகாரிகளை கவருவதற்காக அன்பளிப்பு பொருட்களை வழக்கமாக வழங்கி வருகின்றன.

இதன் காரணமாக பொது மக்கள் மத்தியில் அரச அதிகாரிகள் சம்பந்தமாக தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த செயல்பாடுகள் ஊழல் மோசடிகளுக்கும் வழி வகுக்குமென்று தெரிவித்துள்ள அந்த ஆணைக்குழு, அன்பளிப்புக்களை பெற்றுகொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அரச அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Comment