All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SRI LANKA

புகைப்படத்துடன் பயணிக்கும் பாராளுமன்ற வாகனங்கள்..!!

ranil

பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களில் அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாகனத்தில் பயணிப்பவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதனை அடையாளப்படுத்தும் வகையில் இவ்வாறு வாகனங்களில் அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட உள்ளன.

பெரிய வர்ணப் புகைப்படம் ஒன்று வாகனத்தின் முன் பக்கத்தின் ஓர் மூலையில் ஒட்டப்பட உள்ளதுடன், இரவு நேரங்களிலும் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் ஆகூலின் கடதாசியில் இந்தப் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் யோசனைக்கு அமைய இந்த புகைப்படங்கள் வாகனங்களில் ஒட்டப்பட உள்ளன.

இதுவரையில் சுமார் 200 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த புகைப்படத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment