All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SRI LANKA

போரினால் இடம்பெயர்ந்தோர்க்கு மீள்குடியேற்றும் நடவடிக்கை..!!

swaminathan

இலங்கையில் மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் டி.எம். சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த போர் காரணமாக  வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் தற்போது வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வரை 4,600 ஏக்கர் பரப்பளவில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில்  வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைய வாய்ப்பிருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரை இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை மீள்குடியேற்ற காணிகளை பெற்றுக் கொடுப்பது குறித்து, தற்போது வரை பாதுகாப்பு அமைச்சுடன் ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment