All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

மக்கள் மீது அடுத்த துல்லிய தாக்குதலுக்கு ரெடி ஆகி விட்டார்..!!

modi_8

புத்தாண்டுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புடைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். இதனையடுத்து புதிய ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் போதிய அளவு புழக்கத்தில் விடப்படாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ரிசர்வ் வங்கியும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நிலைமைக்கு தகுந்ததாற்போல் 60க்கும் மேற்பட்ட விதிமுறைகளை திருத்தி வெளியிட்டது. ஆனால், ஊழலுக்கு எதிரான தனது போரட்டத்தில் மக்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் புத்தாண்டுக்கு முன்னர் நாளையோ நாளை மறுதினமோ ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் புதிய ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Comment