All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SPORTS

மறைப்பதற்கு ஏதும் இல்லை..!! நிச்சயதார்த்தமா கோலிக்கு..??

virushka

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு, இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் வரும் புத்தாண்டு அன்று நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக அவர்களது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி, சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் வரும் ஜனவரி 1ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

தற்போது அவர்கள் தொடர்பாக எழுந்த யூகங்களை தெளிவுபடுத்தும் விதமாக விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தங்களது திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் வெறும் வதந்தி எனவும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது குறித்து மறைப்பதற்கு ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment