All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

முதலமைச்சரே அதிரடி நீக்கம்..!! கட்சி விரோதம் காரணமா..??

pema-khandu_0

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஃபெமா காண்டு, தனது கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில், 47 உறுப்பினர் பலத்துடன் நபாம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

ஆனால் நபாம் துகிக்கு எதிர்ப்பு தெரிவித்து கலிகோ புல் தலையில் 30 உறுப்பினர்கள் வெளியேறியதால், ஆட்சி கலைந்தது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் கலிகோ புல் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்றார்.

இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட்ட பின், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஃபெமா காண்டு கடந்த ஜூலை மாதம் பதவி ஏற்றார்.

இந்நிலையில்  கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, ஃபெமா காண்டுவை கட்சியில் இருந்து நீக்குவதாக அருணாச்சல் மக்கள் கட்சியின் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஃபெமா காண்டு மட்டுமின்றி, துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment