All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CANADA

3,800 ஆண்டுகள் பழமையான உருளைக்கிழங்கு தோட்டம்..!

1519-72

வரலாற்றுக்கு முந்தைய கால உருளைக் கிழங்கு தோட்டம், கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,800 ஆண்டுகள் முந்தயது என்று கருதப்படும் அந்த தோட்டம், முன்னர் நீரின் கீழ் இருந்ததாக கூறப்படுகின்றது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தோட்டத்தில் இருந்து, கறுத்துப்போன நிலையில் நூற்றுக்கணக்கான உருளைக்கிழங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள பல்கலைக்கழம் உள்ளிட்ட மேலும் பல நிறுவன ஆய்வாளர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கிருந்து முழுமையாகவும், பகுதியாகவும் 3,767 உருளைக்கிழக்கு மரங்களை மீட்டுள்ளதாகவும், அவை தொடர்பிலான மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment